ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிப்பது பெரிய பொறுப்பாக நினைக்கிறேன்: நடிகை ஸ்ரீதேவி பேச்சு!
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, நடிகை ஸ்ரீதேவி தன் சிறு வயது முதல் கடவுளுக்கு நிகராக மதித்து வந்ததாக நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என இந்திய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஸ்ரீதேவி. அவரது நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் பாலிவுட் திரைப்படம் மாம். இப்படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஸ்ரீதேவியிடம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் அதில் நடிப்பீர்களா? என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் கூறுகையில், Mom என்றால் அம்மா என்று அர்த்தம். தமிழகத்தில் அம்மா என்றாலே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைத்தான் குறிக்கும். ஜெயலலிதா அவர்களின் பாத்திரத்தில் நடிப்பது எனக்கு அளிக்கும் பெரிய பொறுப்பாக இருக்கும் என கருதுகிறேன். சிறு வயதில் அவரை ஒரு கடவுளாகவே நினைத்துவந்தேன். அவருடன் பேசிய நாட்கள் என் நினைவில் இன்னும் இருக்கின்றன என்று கூறியுள்ளார்.