பாட்டி-பேத்தியாக உஷா உதுப் - அக்சராஹாசன் நடித்த பட டைட்டில் அறிவிப்பு
பாட்டி-பேத்தியாக உஷா உதுப் - அக்சராஹாசன் நடித்த பட டைட்டில் அறிவிப்பு
பிரபல பின்னணி பாடகி உஷா உதுப் பாட்டியாகவும், கமல்ஹாசனின் மகள் அக்சராஹாசன் பேத்தியாகவும் நடிக்கவிருக்கும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் அசற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் சற்றுமுன் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
’டிரண்ட் லவுட்’ என்ற நிறுவனம் தயாரிக்கும் முதல் படமான இந்த படத்தில் அக்சராஹாசன் ஆக்சன் நாயகியாக நடிக்கின்றார் என்பதும், இந்த படத்தை இயக்குனர் ராஜாகிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது