வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 20 பிப்ரவரி 2020 (06:34 IST)

இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து – 3 பேர் பலி !

கோப்புப் படம்

சென்னை பூந்தமல்லியில் நடந்த இந்தியன் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் கிரேன் விழுந்து ஒரு உதவி இயக்குனர் உள்பட மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’. கமல் இரண்டு வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் காஜல் அஃகர்வால் கதா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் விவேக், டெல்லி கணேஷ், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு  செய்து வருகிறார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈ வி பி பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. அப்போது கிரேன் அறுந்து விழுந்து உதவி இயக்குனர் மற்றும் உதவி ஒளிப்பதிவாளர் உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 15 க்கும் மேற்பட்டோர் காயமாகியுள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இறந்தவர்கள் மற்றும் காயமானவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.