புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (16:00 IST)

'மெர்சல்' சென்னை ரிலீஸ் உரிமை யாருக்கு தெரியுமா?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரத்தையும் தேனாண்டாள் நிறுவனம் சுறுசுறுப்பாக பார்த்து வருகிறது.



 
அந்த வகையில் தற்போது இந்த படத்தின் சென்னை ரிலீஸ் உரிமை பெற்ற விஐபி குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அது வேறு யாரும் இல்லை, சென்னை அபிராமி திரையரங்கின் உரிமையாளர் அபிராமி ராமநாதன் அவர்கள் தான்.
 
அபிராமி ராமநாதன் அவர்கள் திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்பதால் வரும் தீபாவளி அன்று சென்னையில் அதிகளவிலான திரையரங்கில் இந்த படத்தை ரிலீஸ் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.