அப்துல்கலாமின் இறுதிச் சடங்கு - தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் இரண்டு காட்சிகள் ரத்து

Mahalakshmi| Last Modified புதன், 29 ஜூலை 2015 (12:02 IST)
நாளை அப்துல்கலாமின் இறுதிச் சடங்கு நடக்கிறது. அதனையொட்டி தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் திரையரங்குகளில் இரண்டு காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. இது குறித்து, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது -

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் மறைவு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே பேரிழப்பு. அவருடைய உடல் அடக்கம் நடைபெறுவதையொட்டி, நாளை (வியாழக்கிழமை) காலை காட்சியும், பகல் காட்சியும் ரத்து செய்ய முடிவு செய்திருக்கிறோம்.

- இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :