ஆரி வின்னர், பாலா ரன்னர்: கசிந்தது பிக்பாஸ் ஃபினாலே தகவல்
பிக்பாஸ் நிகழ்ச்சி ஃபினாலே இன்றும் நாளையும் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் பிக் பாஸ் ஃபினாலே முடிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் கசிந்துள்ளன
பிக்பாஸ் ஃபினாலே சூட்டிங் முடிந்து விட்டதாகவும் இதில் ஆரி வெற்றி பெற்று விட்டதாகவும் அவருக்கு 78 சதவீத வாக்குகள் கிடைத்து இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. அதேபோல் பிக்பாஸ் ரன்னர் பாலாஜி என்றும் அவருக்கு சுமார் 4 கோடி வாக்குகள் கிடைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் மேலும் ரியோவுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது
இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தாலும் இந்த தகவல் உறுதி செய்யப்பட்ட தகவல் ஆக இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் வின்னர் யார் மற்றும் ரன்னர் யார் என்பது நாளை இரவு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது மட்டும் தான் தெரியும் என்றும் இந்த தகவல்கள் அதிகாரபூர்வமற்ற தகவல் என்றும் கூறப்படுகிறது