ஓவியாவின் லிப்பில் லாக்கான ஆரவ்: வெளியிடுமா உங்கள் அபிமான தொலைக்காட்சி?

ஓவியாவின் லிப்பில் லாக்கான ஆரவ்: வெளியிடுமா உங்கள் அபிமான தொலைக்காட்சி?


Caston| Last Updated: வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (16:01 IST)
கடந்த சில தினங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா ஆரவ் காதல் கதை மெகா சீரியல் ரேஞ்சுக்கு போய்க்கொண்டு இருக்கிறது. என்னப்பா இது போர் அடிக்குது என சொல்லும் அளவுக்கு உள்ளது நிலைமை.

 
 
ஓவியா தேடி தேடி போவதும் ஆரவ் விலகி விலகி செல்வதுமாக கண்ணீர், கெஞ்சல், சண்டை, கிறுக்குத்தனம் என பாக்குற நம்மள கடுப்பேத்துறாங்க. என்ன இந்த பொண்ணு ஓவியா தன் பெயரை   தானே கெடுத்திடுச்சே என பலரும் கூறுகின்றனர்.
 
ஓவியா வேண்டுமென்றே இப்படியெல்லாம் பண்ணுகிறார், தொடக்கத்தில் இருந்தே ஓவியாதான் ஆரவை தேடி தேடி போகிறார் அதனால் ஆரவ் மீது தப்பு இருக்காது என சில கூறுவது பிக் பாஸ் காதுக்கு கேட்டிருக்குமோ என்னவோ, அந்த தொலைக்காட்சி ஆரவ் ஓவியா முத்தம் கொடுத்த காட்சியை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
ஓவியாவும் ஆரவும் தங்களை மறந்து லிப் கிஸ் அடித்த அந்த காட்சியை ஏதாவது ஒரு எபிசோடில் மின்னல் போல தோன்றச்செய்ய சேனல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளார்களாம். இதை ஒளிபரப்பினால் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பார்களே என்ற அச்சமும் உள்ளது அவர்களுக்கு.
 
ஆரவ் ஓவியாவுக்கு லிப் கிஸ் கொடுத்ததால் தான் ஓவியா திரும்ப திரும்ப ஆரவிடம் ஒரு முத்தம் கொடு ஒரு முத்தம் கொடு என கேட்கிறாரோ. நான் கொடுத்ததை திரும்ப கொடு என ஓவியா கேட்டதும் முத்தத்தைதான் திருப்பி கேட்டிருப்பாரோ என நினைக்க தோன்றுகிறார். ஆனால் ஆரவ் இதையெல்லாம் மறுக்கிறார்.
 
சில தினங்களுக்கு முன்னர் சினேகன் சமையல் செய்துகொண்டு இருக்கும் போது ஓவியாவும் ஆரவும் அவரது அருகில் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது சுற்றி யாராவது இருக்கிறார்களா என திரும்பி பார்த்து கொண்டிருந்த ஓவியா சினேகன் சற்று நகர்ந்து சென்றதும் ஆரவை அவசரமாக நெருங்கினார்.
 
ஓவியா ஆரவை மிக நெருக்கமாக நெருங்கினார். ஆனால் அப்போது உடனே விளம்பர இடைவேளை போடப்பட்டது. இதனை வைத்து பார்க்கும் போது ஓவியா ஆரவ் லிப் கிஸ் காட்சி அப்போது தான் நடந்திருக்கும் என யூகிக்கப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :