1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 11 ஜூலை 2014 (09:27 IST)

திருடன் போலீஸில் ஆரண்ய காண்டம் பாடல்

எஸ்.பி.பி.சரண் தயாரிக்கும் படம் என்றால் வித்தியாசமாக, நாம் விரும்புகிற மாதிரி ஏதாவது இருக்கும். தமிழ் சினிமாவில் புதிய பாதை அமைத்த சென்னை 28 -ம், கடந்த பத்து வருடங்களின் பெஸ்ட் ஃபிலிமான ஆரண்ய காண்டமும் அவரது தயாரிப்புதான்.

சரணின் புதிய படம் திருடன் போலீஸ். அட்டகத்தி தினேஷ், ஐஸ்வர்யா நடித்திருக்கும் இந்தப் படத்தை கார்த்திக் ராஜு என்பவர் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசை. நேற்று படத்தின் பாடல்களை வெளியிட்டனர். அப்போது சுவாரஸியமான தகவல் ஒன்றை வெளியிட்டார் சரண்.

ஆரண்ய காண்டத்துக்கு யுவன் ஷங்கர் ராஜாதான் இசை. அவர் போட்ட டியூன்களில் ஒன்றை அப்படத்தில் பயன்படுத்தவில்லை. அட்டகாசமான அந்த ட்யூன் திருடன் போலீஸ் படத்தின் சிச்சுவேஷனுக்கு பொருந்த அப்படியே பயன்படுத்தியிருக்கிறார் சரண்.

விழாவில் அந்தப் பாடலைதான் திரையிட்டார்கள். ஆறாமல் அதே சூட்டோடுதான் இருந்தது. ஆனால் விழாவில் அனைவரும் பாராட்டிய யுவன் மட்டும் மிஸ்ஸிங்.

தொழுகைக்கு போயிருப்பாரோ?