17 நாட்களில் இந்திய திரைப்பட வசூல் சாதனையை முறியடித்த 'தங்கல்'


லெனின் அகத்தியநாடன்| Last Updated: செவ்வாய், 10 ஜனவரி 2017 (08:18 IST)
ஆமீர்கான் நடிப்பில் அற்புதமான திரைப்படத்தை தந்திருக்கிறது நிதேஷ் திவாரி இயக்கத்தில் வெளியாகியுள்ள தங்கல் திரைப்படம் இந்திய அளவில் வசூல் ரீதியாக சாதனைப் படைத்துள்ளது.

 

மல்யுத்தப் போட்டிகளில் மட்டுமல்லாமல் அனைத்துத் துறைகளிலும் பெண்களால் சாதிக்க இயலும் என்பதை வலியுறுத்தும் விதமாக, பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் தங்கல் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

’தங்கல்’ திரைப்படம் இந்தியா முழுவதும் பெருத்த வரவேற்பை பெற்றுள்ள அதே வேளையில், வசூலிலும் சாதனைப் படைத்து வருகிறது. தங்கல் திரைப்படம் வெளியாகி 17 நாட்களில் 345.30 கோடி வசூலித்து அபார சாதனைப் படைத்துள்ளது.

இதற்கு முன்னதாகவும் அவருடைய பீகே திரைப்படமே இந்திய அளவில் அதிக வசூல் செய்து சாதனைப் படைத்திருந்தது. பீகே திரைப்படம் 340.8 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


webdunia

இதில் மேலும் படிக்கவும் :