திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 30 மே 2023 (19:54 IST)

ரிலீஸுக்கு முன்பே பல கோடி வியாபாரமான ''ஆதிபுரூஷ்''

ADIPURUSH
பிரபாஸ் நடிப்பில் தயாராகி நீண்ட நாளாக இழுபறியில் இருந்த ஆதிபுருஷ் படம் மிகப்பெரிய அளவில் வியாபாரமாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்  பிரபாஸ். இவர் நடிப்பில் உருவாகியுள்ள இதிகாச படம் ஆதிபுருஷ். இதில் பிரபாஸ் ராமனாக நடித்துள்ளார். இந்தி நடிகர் சயிப் அலிகான் ராவணனாக நடித்துள்ளார். இந்த படத்தை தன்ஹாஜி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஓம் ராவத் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் டீசர் அனைத்து இந்திய மொழிகளிலும் கடந்த ஆண்டில் வெளியானது.

இதையடுத்து,  பல கட்ட அனிமேஷன், கிராபிக்ஸ் பணிகள் முடிந்து பெரும் எதிர்பார்ப்புடன் சமீபத்தில் வெளியான ஆதிபுருஷ் ட்ரெய்லர்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், ஆதிபுரூஸ் படம் வெளியாகும் முன்பே  பல கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இத்திரைப்படம் ரூ.170 கோடிக்கு வெளியிடும் உரிமத்திற்கு வியாபாரம் ஆகியுள்ளதாகவும், பிரபல பிபள் மீடியா கம்பெனி என்ற தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை வெளியிடும் உரிமத்தைக் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.