1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 2 அக்டோபர் 2023 (11:26 IST)

வந்துவிட்டார் ஆதிகுணசேகரன்… வைரலாகும் எதிர்நீச்சல் ப்ரோமோ!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் டி ஆர் பி ரேட்டிங்கில் உச்சம் தொட்டது. சமீபத்தில் இந்த சீரியல் 9.3 என்ற புள்ளியை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர் சீரியல் குழுவினர். இந்நிலையில் இப்போது இந்த சீரியல் 500 ஆவது எபிசோட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியல் தமிழில் அடைந்த வெற்றியை அடுத்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி மற்றும் மராத்தி என ஐந்து மொழிகளில் டப் ஆகி ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

இந்த சீரியலின் இமாலய வெற்றிக்கு மிக முக்கியக் காரணம் அதில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்துவின் அட்டகாசமான நடிப்புதான். அவர் சமீபத்தில் மறைந்ததை அடுத்து அந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என கேள்வி எழுந்தது.

இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள புதிய ப்ரோமோவில் ஆதிகுணசேகரன் திரும்பி வந்துவிட்டார் எனக் காட்டியுள்ளனர். இன்னும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகரின் முகத்தைக் காட்டவில்லை என்றாலும், அது நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்திதான் என்பதை ரசிகர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள். இந்த வாரம் ஒளிபரப்பாகும் எபிசோட்களைப் பார்க்கும் ஆர்வத்தை இந்த ப்ரோமோ ஏற்படுத்தியுள்ளது.