வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 9 ஏப்ரல் 2018 (19:05 IST)

வேலைநிறுத்த போராட்டத்தின் இழப்பை ஈடுகட்ட களமிறங்கிய ஷகிலா

தமிழ் திரைப்படவுலகம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய படங்களை ரிலீஸ் செய்யாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டமின்றி உள்ளது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் தியேட்டர் நிர்வாக செலவுக்கு கூட வசூலாகவில்லை என்று புலம்பி வருகின்றனர்.
 
இந்த நிலையில் கோவையில் உள்ள திரையரங்கு ஷகிலா நடித்த கில்மா படங்களை தினந்தோறும் திரையிட்டு கல்லாவை நிரப்பி வருகிறது. ஒவ்வொரு நாளும் வெவேறு ஷகிலா படங்கள் திரையிடுவதால் தினந்தோறும் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை திரையரங்கை நிரப்பி வருகின்றனர்.
 
இந்த ஐடியாவை மற்ற திரையரங்குகளும் பின்பற்றும் முன்னர் வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்,