செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 9 பிப்ரவரி 2023 (14:45 IST)

சென்னையில் இசை கச்சேரி நடத்த பர்மிஷன் வாங்க முடியல… ரசிகருக்குப் பதிலளித்த ஏ ஆர் ரஹ்மான்

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் புனேவில் மார்ச் 7 ஆம் தேதி இசைக் கச்சேரி நடத்த உள்ளார்.

தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான ஏ ஆர் ரஹ்மான் தற்போது அதிக அளவில் தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது மாமன்னன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், வரிசையாக வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இசைக் கச்சேரி நடத்தி வருகிறார்.

இந்நிலையில் வரும் மார்ச் 7 ஆம் தேதி புனேவில் இசை கச்சேரி நடக்க உள்ளதை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். அதில் கமெண்ட் செய்த ரசிகர் ஒருவர் “சார் சென்னைனு ஒரு ஊர் இருக்கு ஞாபகம் இருக்கா?” என சென்னையில் நீண்ட நாட்களாக கச்சேரி நடத்தாதது குறித்து ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

அதற்கு பதிலளித்த ரஹ்மான் “Permission.. permission… permission… சென்னையில் கச்சேரிக்கு அனுமதி வாங்க 6 மாத காலத்துக்கு மேல் ஆகிறது” எனக் கூறியுள்ளார்.