Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

'ஸ்பைடர்' ரிலீஸ் தேதி திடீர் தள்ளி வைப்பு ஏன்?

வியாழன், 11 மே 2017 (01:05 IST)

Widgets Magazine

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் 'ஸ்பைடர்' படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் 23 என முருகதாஸ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். 


ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட போதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் சில மாற்றங்களைச் செய்ய இயக்குனர் முருகதாஸ் முடிவு செய்துள்ளதால் அந்த காட்சிகளை மீண்டும் படமாக்க திட்டமிட்டுள்ளாராம்.

புதிய கிளைமாக்ஸ் காட்சியில் விஷவல் எஃபெக்ட்ஸ், கிராபிக்ஸ் ஆகிய பணிகளை செய்து முடிக்க குறைந்தது  3 மாத காலம் ஆகும் என்பதால் ‘ஸ்பைடர்’ படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், அனேகமாக இந்த படம் வரும் தீபாவளியில் தான் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

மகேஷ்பாபு, ராகுல்ப்ரித்திசிங், எஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகி வருகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சன்னி லியோனுக்கு ரசிகர் மன்றம்! இது நாமக்கல் இளசுகளின் கூத்து

சினிமா நடிகர்களுக்கு கோவில் கட்டுவது, பூஜை செய்வது போன்ற பைத்தியக்காரத்தனமான வேலைகள் ...

news

அஜித்தின் 'விவேகம்' டீசர்! ஒரே நிமிடத்தில் 25,000 பார்வையாளர்க்ள், 19,000 லைக்ஸ்!

தல அஜித்தின் 'விவேகம்' படத்தின் டீசர் சற்று முன்னர் வெளியாகி யூடியூபே அதிரும் வகையில் ...

news

அஜித்தின் 'விவேகம்' டீசர் விமர்சனம்

அஜித் ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பான 'விவேகம்' படத்தின் டீசர் சற்று முன்னர் வெளியாகி ...

news

அஜித்தின் 'விவேகம்' டீசர் எத்தனை வினாடி? சற்று முன் வெளிவந்த புதிய தகவல்

தல அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் டீசர் இன்று நள்ளிரவு 12.01க்கு வெளியாகவுள்ள நிலையில் ...

Widgets Magazine Widgets Magazine