1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 19 ஜூலை 2020 (11:16 IST)

இன்று மாலை சூர்யா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்: அதிரடி அறிவிப்பு

இன்று மாலை சூர்யா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்
சூர்யாவின் ‘சூரரை போற்று’ திரைப்படம் சமீபத்தில் சென்சாரில் ’யு’ சான்றிதழ் பெற்று, இந்த திரைப்படம் திரையரங்குகளில் திரையிடுவதற்கு தயார் நிலையில் உள்ளது என்பது தெரிந்ததே. வரும் ஆகஸ்ட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டால் ‘சூரரை போற்று’ படம் தான் ரிலீசாகும் முதல் படமாக இருக்கும் என கருதப்படுகிறது
 
இந்த நிலையில்  ‘சூரரை போற்று’ படத்தில் மூன்று புதிய பாடல்கள் இணைக்கப்பட்டுளதாகவும், விரைவில் இதுகுறித்த தகவல்கள்  என்று இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் கடந்த சில நாட்களுக்கு முன் குறிப்பிட்டிருந்தார்
 
இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று மாலை ‘சூரரை போற்று’ படத்தின் முக்கிய அப்டேட் வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். 
 
சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகியுள்ளது