1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 27 ஏப்ரல் 2020 (18:22 IST)

நேத்து ராத்திரி டைனிங் ரூம்லே... கணவருடன் ஜல்ஸா போட்டோவை வெளியிட்ட சன்னி லியோனி!

பாலிவுட் சினிமாவில் கிறங்கடிக்கும் அழகில் கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோனி. ஆபாச படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்தி பிக்பாஸில் பங்குபெற்று அமோக வரவேற்பை பெற்ற இவர் பாலிவுட்டின் டாப் நடிகைகளை ஓரங்கட்டிவிட்டு ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்துவிட்டார்.

ஆபாச நடிகையாக இருந்தாலும் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை பெற்ற இவரை இந்திய ரசிகர்கள் நடிகையாக ஏற்றுக்கொண்டனர். இதற்கிடையில் கடந்த 2011-ம் ஆண்டு டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்து கொண்ட சன்னி லியோனி நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து அனைவரது மனதையும் ஈர்த்துவிட்டார். மேலும், இவருக்கு ஆசேர் சிங், நோவா சிங் என்ற மகன்களும் உள்ளனர்.

இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் சன்னி தற்போது தமிழில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த "வீரமாதேவி" என்ற படத்தில் கம்பீரமான மகாராணியாக நடித்து தென்னிந்திய ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறார் சன்னி. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு "டைனிங் ரூமில் கணவருடன் டேட் நைட் என கூறி இருவரும் சேர்ந்து ஒயின் குடித்ததை குசும்புத்தனமாக பதிவிட்டுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Date night with @dirrty99 !! Lol in the dining room...

A post shared by Sunny Leone (@sunnyleone) on