1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 19 செப்டம்பர் 2018 (12:41 IST)

திருமணம் நின்றது குறித்து பிரபல நடிகை உருக்கமான விளக்கம்

தெலுங்கில் சமீபத்தில் வெளியான கீதா கோவிந்தம் படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. இவர் கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக இருந்தது.


ஆனால் ரஷ்மிகா திடீரெனெ பிரேக் அப் செய்தார். அதன்பிறகு அவர் நடிக்கவிருந்த ஒரு கன்னட படத்தில் இருந்தும் திடீரென விலகினார்.

இதனால் ரஷ்மிகா இனி கன்னட படத்தில் நடிக்க மாட்டார் என சினிமா துறையில் பேச்சு அடிபட்டது. சமூக வலைத்தளங்களிலும் அதிகம் இது பேசப்பட்டது. அதை பார்த்து அதிர்ச்சியான நடிகை தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில் திருமணம் நின்றது பற்றி உருக்கமாக பேசியுள்ள அவர், தன்னை பற்றி வரும் நிறைய வதந்திகளை கண்டு மனம் நொந்து போனதாக தெரிவித்துள்ளார். இனி அமைதியாக இருக்க முடியாது என்று விளக்கம் அளித்துள்ள அவர்,  "கன்னட படங்களில் தொடர்ந்து நடிப்பேன்" என விளக்கம் கொடுத்துள்ளார்.