1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 31 ஜனவரி 2019 (10:05 IST)

பிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை: தொடரும் அவலங்கள்

மும்பையில் சின்னத்திரை நடிகர் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபகாலமாக சின்னத்திரை நடிகர்களும், நடிகைகளும் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு நடிக்க தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்காததே ஆகும். தொடர் வாய்ப்பு கிடைக்காததால் வாழ்க்கையை நடத்த முடியாத அவர்கள் விரக்தியடைந்து தற்கொலை முடிவிற்கு தள்ளப்படுகிறார்கள்.
இந்நிலையில் மும்பையை ஒஷிவாராவை சேர்ந்த இளம்நடிகரான ராகுல் ஒரு சின்னத்திரை நடிகராவார். டிவி தொடர்களில் நடித்து வந்த இவருக்கு சமீப்பகாலகாலமாக போதிய வாய்ப்பு வரவில்லை. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.