Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

96 வயது முதியவராக விஜய் சேதுபதி

Cauveri Manickam (Sasi)| Last Modified புதன், 2 ஆகஸ்ட் 2017 (11:14 IST)
பிரேம்குமார் இயக்கிவரும் ‘96’ படத்தில், 96 வயது முதியவராக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

 
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் எடிட்டராகப் பணியாற்றியவர் பிரேம்குமார். இவர் இயக்குநராக  அறிமுகமாகும் படம் ‘96’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், த்ரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். இருவரும் பள்ளியில் ஒன்றாகப் படிப்பது போன்ற காட்சிகள், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் படமாக்கப்பட்டது.
 
தற்போது, பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில், 96 வயது முதியவராக விஜய் சேதுபதி நடிக்கிறார். ஏற்கெனவே ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தில் 55 வயது முதியவராக நடித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதியுடன் காளி வெங்கட், ‘ஆடுகளம்’ முருகதாஸ் மற்றும் 300 துணை நடிகர்களுடன் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு  நடைபெற்று வருகிறது. ஒரு முதியவரின் ஃபிளாஷ்பேக்காக இந்தக் கதை அமைந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :