1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (11:58 IST)

சூர்யாவின் ‘அஞ்சான்’ படத்தின் 7 வருடங்கள்: கொண்டாடும் ரசிகர்கள்!

சூர்யாவின் ‘அஞ்சான்’ படத்தின் 7 வருடங்கள்: கொண்டாடும் ரசிகர்கள்
சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘அஞ்சான்’. இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படம் இல்லாததால் படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை
 
ஆனால் அதே நேரத்தில் தெலுங்கில் இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் அதேபோல் இந்தி டப்பிங்கில் இந்த படம் மிகப்பெரிய சாதனை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சூர்யாவின் அஞ்சான் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 7 வருடங்கள் முடிவடைந்ததை அடுத்து இதுகுறித்த ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது 
 
‘அஞ்சான்’ திரைப்படம் தமிழில் தோல்வி என்றாலும் இந்த திரைப்படம் சூர்யாவின் ரசிகர்களுக்கு பிடித்த படங்களில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 7 Years of Anjaan என்ற ஹேஷ்டேக் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சூர்யா, சமந்தா, வித்யூத் ஜம்மால், மனோஜ் பாஜ்பாய் உள்பட பலர் நடித்த இந்த திரைப்படத்திற்கு யுவன்ஷஙகர் ராஜா இசையமைத்திருந்தார்.