செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 17 மே 2021 (13:39 IST)

பிக்பாஸ் குழுவில் ஆறு பேருக்கு கொரோனா… படப்பிடிப்பு நிறுத்தம்!

கொரோனா தொற்று காரணமாக மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள ஈ வி பியில் அரங்கு அமைக்கப்பட்டு பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் பிக்பாஸ் முடிந்த நிலையில் இப்போது மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதை மோகன் லால் தொகுத்து வழங்குகிறார். வாரா வாரம் இந்த குழுவை சேர்ந்த அனைவர்களுக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இப்போது 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், நிகழ்ச்சி தற்காலிகமாக இரு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.