Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

துல்கர் சல்மானுக்கு ஜோடியாக இத்தனை ஹீரோயின்களா?

cauveri manickam| Last Modified திங்கள், 31 ஜூலை 2017 (16:33 IST)
துல்கர் சல்மான் நடித்துள்ள ‘சோலோ’ படத்தில், அவருக்கு ஜோடியாக 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.
 பிஜோய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் ‘சோலோ’. தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தியில் இந்தப் படம் உருவாகி வருகிறது. நாசர், சுஹாசினி மணிரத்னம், ரா.பார்த்திபன், சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 4 வேடங்களில் துல்கர் சல்மான் நடித்துள்ளார்.

எனவே, அவருக்கு ஜோடியாக 4 ஹீரோயின்களும் நடித்துள்ளனர். சாய் தன்ஷிகா, நேகா ஷர்மா, ஸ்ருதி ஹரிஹரன், ஆர்த்தி வெங்கடேஷ் இந்த நால்வரும்தான் அவர்கள். படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. செப்டம்பர் மாதம் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :