Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஒரே நாளில் வெளியாகும் 4 அஜித் படங்கள்


cauveri manickam| Last Modified செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (12:16 IST)
அஜித் பிறந்தநாளான மே 1ஆம் தேதி, அஜித் நடிப்பில் வெளியான படங்களில் இருந்து 4 படங்களை மட்டும் மீண்டும் திரையிட உள்ளனர்.
 
 

அஜித் பிறந்தநாளுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. எனவே, பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கும், கொண்டாட்டங்களுக்கும் அஜித் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், அன்றைய தினம் அஜித் நடிப்பில் வெளியான படங்களை மீண்டும் திரையிடத் திட்டமிட்டுள்ளது, சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கம்.
 
ஆனால், அந்த 4 படங்களும் என்னவென்று சொல்ல மாட்டார்களாம். ‘பிளைண்ட் டேட்’ போல டிக்கெட் எடுத்துக்கொண்டு உள்ளே போய் உட்கார்ந்துவிட வேண்டும். பெயர் போடும் போதுதான் என்ன படமென்று தெரியவரும். எந்தப் படமாக இருந்தால் என்ன… அஜித் நடித்த படமென்றாலே அவருடைய ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தானே..?


இதில் மேலும் படிக்கவும் :