புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 25 ஆகஸ்ட் 2021 (18:15 IST)

சூர்யா நிறுவனத்தின் பெயரில் போலி ஆடிஷன்: போலீஸில் புகார்!

நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்தி போலியாக ஆடிஷன் நடத்துவதாக விளம்பரம் வெளிவந்ததை அடுத்து இதுகுறித்து சூர்யா நிறுவனம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது
 
சூர்யாவின் 2டி நிறுவனத்தின் சார்பில் புதிய படத்திற்காக ஆடிசன் நடைபெறுவதாகவும் இந்த ஆடிஷனில் கலந்து கொள்வதற்கு கட்டணம் வசூலிக்க படுவதாகவும் விளம்பரம் ஒன்று வெளிவந்தது 
 
இந்த விளம்பரம் குறித்து 2டி நிறுவனம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது. மேலும் 2டி நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இது போன்ற போலியான விளம்பரங்கள் மூலம் மக்கள் ஏமாந்து விட வேண்டாம் என்றும் விழிப்புடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
 
எங்கள் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்திற்கு நாங்கள் ஆடிஷன் நடத்துவதில்லை என்றும் எங்கள் இயக்குனரின் அலுவலகத்தில் மட்டும்தான் ஆடிசன் நடத்தப்படும் என்றும் அதிலும் கட்டணம் எதுவும் தரப்படுவதில்லை என்றும் அதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது