வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (13:49 IST)

திரையுலகில் 25 ஆண்டுகள்: சூர்யா டுவிட்

surya
நடிகர் சூர்யா திரையுலகில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆனதை அடுத்து டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது 
 
கடந்த 1997ஆம் ஆண்டு விஜய் நடித்த நேருக்கு நேர் என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் சூர்யா. இந்த படம் 1997ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி வெளியான நிலையில் இன்றுடன் இந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகின்றன
 
இதனை அடுத்து சூர்யா 25 என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தனது திரையுலக பயணம் 25 ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து அவர் தனது டுவிட்டரில் உண்மையில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றும் அழகான இந்த 25 வருடத்தில் குறித்து தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் கனவு கண்டால் நிச்சயம் ஒருநாள் அது நிறைவேறும் என்றும் தெரிவித்துள்ளார்