வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: சனி, 17 மார்ச் 2018 (16:55 IST)

‘காலா’ ரஜினியுடன் மோதும் 22 ஹீரோக்கள்

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ ரிலீஸாகும் அதே தேதியில், ‘அவெஞ்சர்ஸ்’ படமும் ரிலீஸாக இருக்கிறது.


 
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘காலா’. மும்பையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், நானா படேகர், ஈஸ்வரி ராவ், அஞ்சலி பட்டேல், சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இதை தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படம், வருகிற ஏப்ரல் 27ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக இருக்கிறது.

மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் படம் ‘அவெஞ்சர்ஸ் : த இன்பினிட்டி வார்’. ஆண்டனி ரூஸோ, ஜோ ரூஸோ இயக்கியுள்ள இந்தப் படத்தில், 23 ஹீரோக்கள் நடித்துள்ளனர். இந்தப் படமும் ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸாகிறது. உலகம் முழுவதும் உள்ள ‘அவெஞ்சர்ஸ்’ ரசிகர்கள் இந்தப் படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்தியாவைத் தாண்டி மலேசியா, சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட பல நாடுகளில் ரஜினிக்கு ரசிகர்கள் இருப்பதால், ‘காலா’ படம் உலகின் பல்வேறு பகுதிகளில் ரிலீஸாகும். எனவே, ‘அவெஞ்சர்ஸ்’ படத்துடன் ‘காலா’ படம் மோதும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 23 ஹீரோக்களை எதிர்த்து ஒற்றை ஆளாக ரஜினி சாகசம் நடத்துவாரா என்பதைப் பார்க்கலாம்.