திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 8 ஜூன் 2023 (13:19 IST)

மலையால சினிமாவின் பிளாக்பஸ்டர் ஹிட் 2018… ஓடிடியில் ரிலீஸ்!

மலையாள சினிமா தனக்கென சிறிய மார்க்கெட்டை கொண்டிருந்தாலும், இந்திய சினிமா துறையில் ஆரோக்யமான ஒரு துறையாக திகழ்கிறது. அங்கு கதையம்சம் உள்ள படங்களும் கமர்ஷியல் படங்களும் சம அளவில் உருவாகி ஆரோக்யமான ஒரு சூழலைக் கொண்டுள்ளன.

அந்த வகையில் இந்த ஆண்டு மலையாளத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற  திரைப்படம் டோவினோ தாமஸ் நடித்துள்ள 2018. கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஒட்டி இந்த படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஜூட் ஆண்டனி.

வெளியானது முதல் சக்கை போடு போட்ட இந்த திரைப்படம் 176 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்குகள் மூலமாக மட்டும் வசூல் செய்துள்ளது. கேரளாவில் இதற்கு முன்னர் சாதனை படைத்த புலி முருகன் வசூல் சாதனையையும் முறியடித்துள்ளது.

இந்நிலையில் இப்போது இந்த திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. தமிழிலும் டப் செய்யப்பட்டு இந்த படம் ஓடிடியில் கிடைக்கிறது.