சனி, 28 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (12:04 IST)

லியோ படத்தில் 2000 நடன கலைஞர்கள்... சம்பவம் சிறப்பா செய்யும் லோகேஷ்!

விஜய் நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். 
 
இப்படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் சென்று முக்கியமானக் காட்சிகளை படமாக்கி சென்னை திரும்பியுள்ளனர். இதையடுத்து சென்னையில் அடுத்த கட்ட ஷுட்டிங் தொடங்கி நடந்து வருகிறது.
 
இந்நிலையில் இந்த படத்துக்கான பிரம்மாண்டமான பாடல் ஒன்று படமாக்கப்பட உள்ளதாம். இந்த ஒரு பாடலுக்கு ஒரு பாடலில் 2000 மேற்பட்ட நடன கலைஞர்கள் நடனம் ஆட வைக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளாராம். ஆக படம் பாலிவுட்டையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு இருக்கும் எதிர்பார்க்கலாம்.