ஆர்.ஆர்.ஆர் படத்த்தைக் கைப்பற்றிய 2 ஓடிடி நிறுவனங்கள்
ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தை 2 பெரிய ஓடிடி நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது.
தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள படம் ஆர்.ஆர்.ஆர். சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீதராம ராஜூ மற்றும் கோமரம் பீம் ஆகியோரது வாழ்க்கையை மையப்படுத்திய இந்த கதையை ஆக்ஷன் படமாக இயக்கியுள்ளார் ராஜமௌலி.
இந்த படம் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தாமதம், இரண்டாம் அலை கொரோனா உள்ளிட்ட காரணங்களால் 2022ம் ஆண்டு மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பட ரிலீஸுக்கு ஒரு வருட இடைவெளி உள்ள நிலையில் இந்த படத்தை உலக மொழிகளான ஆங்கிலம், போர்ச்சுகீஷ், ஸ்பானிஸ், துருக்கி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக தனுஷின் “ஜகமே தந்திரம்” படமும் உலக மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இப்படத்தின் தமிழ் , தெலுங்கு,மலையாளம் மொழிகளுக்கு ஜீ5 நிறுவனமும், இந்தி மொழிக்கு நெட் பிளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது.