வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 23 செப்டம்பர் 2023 (20:30 IST)

தற்கொலை குறித்து நானும் யோசித்திருக்கிறேன்-நடிகர் கமல்ஹாசன்

தற்கொலை குறித்து 20,21 வயதில் இருக்கும்போது நானும் யோசித்திருக்கிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவர் 'இந்தியன் 2' படத்திலும், 'கமல் 233' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த  நிலையில், சென்னையில் உள்ல லயோலா கல்லூரியில் நடைபெற்று வரும் நிகழ்ச்சி  ஒன்றில்  கமல்ஹாசன்  கலந்துகொண்டார்.

அப்போது பேசிய நடிகர் கமல்ஹாசன்,  தற்கொலை குறித்து  நானும் யோசித்திருக்கிறேன் என்று கூறினார்.

மேலும், தற்கொலை குறித்து 20,21 வயதில் இருக்கும்போது நானும் யோசித்திருக்கிறேன். கலை உலகம் என்னை கண்டுகொள்ளவில்லையே என்ற ஏக்கத்தில் யோசித்திருக்கிறேன். வெற்றி கிடைக்கும் வரை காத்திருக்க  வேண்டும். ஒருபோதும் அவசரப்படக்கூடாது; வாழ்க்கையின் ஒரு அங்கம். அது வரும்போது வரட்டும். நீங்களாகவே தேட வேண்டாம் என்று தெரிவித்தார்.