செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 3 டிசம்பர் 2018 (08:41 IST)

2.0 ஞாயிற்றுக்கிழமை வசூல் இத்தனை கோடியா!!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய் வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது.

இந்த படம் சென்னையில் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. முதல் நாளில் 2.64 கோடி வசூலித்தது. இரண்டாம் நாளில் 2.13கோடி ரூபாயும், 3ம் நாளில் 2.57 கோடி ரூபாயும் வசூலானது.
 
இந்நிலையில் தற்போது 4வது நாள் (ஞாயிறு) வசூல் விவரம் வெளிவந்துள்ளது. சென்னையில் மட்டும் 2.75 கோடி வசூலித்து முதல் நாள் வசூலையும் மிஞ்சியுள்ளது 2.0.
சென்னையில் மட்டும் 4நாளில்  10.09  கோடி வசூலாகி எல்லா படங்களின்  ரெக்கார்ட்டுகளை முறியடித்து 2.0 முதல் இடத்தில் உள்ளது.  ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்த வசூல் அதிகரித்து உள்ளது.