வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Updated : வெள்ளி, 23 மே 2014 (14:23 IST)

மக்களிடமிருந்து வசூலிக்கக் கூடாது: தவிப்பில் தியேட்டர் அதிபர்கள்

’கோச்சடையான்’ படம் மூலம் கோடி கோடியாக அள்ளி விடலாம் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த தியேட்டர் அதிபர்களுக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது ஐகோர்ட்டின் அதிரடி தீர்ப்பு.
 தமிழ் மொழிக்கும், பண்பாடு-கலாச்சாரத்தை வளர்க்கும் விதமாக, தனிக்கை குழுவினரிடம் ‘யூ’ சான்றிதழ் பெற்ற படங்களுக்கு தமிழகரசு கேளிக்கை வரிவிலக்கு அளித்து வருகிறது.
 
அந்த வகையில், ’கோச்சடையான்’ படத்துக்கும் கேளிக்கை வரிவிலக்கு அளித்து உத்திரவிட்டது.இதை ரத்து செய்ய வேண்டும். வரிவிலக்கு அளிக்கப்பட்ட படங்களுக்கும் பொது மக்களிடம் அதிகமான டிக்கெட் கட்டணம் வசூல் செய்து வருகிறார்கள். 
 
யாருக்காக வரிவிலக்கு அளிக்கிறீர்களோ அது அவர்களுக்கு போய் சேராமல் தியேட்டர் உரிமையாளர்களுக்கே சென்று சேருகிறது என முத்தையா என்கிற வழக்கறிஞர் வழக்கு தொடர, அதை விசாரித்த நீதிபதிகள் ‘கோச்சடையான்’ படத்துக்கான கேளிக்கை வரியை பொது மக்களிடமிருந்து வசூலிக்கக் கூடாது என அதிரடி உத்தரவை வழங்கியுள்ளது. இதனால் விழிப்பிதுங்கிக் கிடக்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.