வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: செவ்வாய், 20 மே 2014 (15:11 IST)

‌ஜீவாவு‌க்கு மு‌க்‌கிய படமாக அமையு‌ம் - யா‌ன் இய‌க்குன‌ர்

ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் ஒரு வழியாக எடுத்து முடித்திருக்கும் படம்தான் யான். படம் ஆரம்பித்த நாளில் இருந்தே ஒவ்வொரு விஷயத்திற்கும் காலதாமதம்தான். 
 
இந்த படம் நினைத்தபடி சென்ற ஆண்டு டிசம்பர் மாதமே வெளியாகி இருக்க வேண்டும். பாதி கதை மொராக்கோ நாட்டில் நடப்பதுபோல் இருந்ததால், மொத்த யூனிட்டுக்கும் விசா வாங்கவே பல மாதங்கள் இழுத்தடித்தார்கள். 
அதற்கப்புறம், பாடல்களை முடித்துக் கொடுக்க ஒரு ஆண்டு ஆகும் என்று முதலிலேயே ஹாரிஸ் ஜெயராஜ் கூறி இருந்தார். ஆனால், அதையும் தாண்டி காத்திருக்க வேண்டிய சூழ்நிலையாகி விட்டது. இப்படி எதை தொட்டாலும் ஏதாவது ஒரு காரணத்தினால் லேட்டாக்கிக் கொண்டே இருந்தது. 
 
அப்படியிருந்தாலும் படம் மிகவும் திருப்தியாக வந்திருக்கிறது. பாடல்களும் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஜீவாவுக்கு இது ஒரு முக்கிய படமாக அமையும் என்கிறார் இயக்குனர்.