வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Updated : வியாழன், 15 மே 2014 (11:39 IST)

ஹன்சிகாதான் வில்லி

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து வரும் ரோமியோ ஜுலியட் படத்தில் வில்லன் என்று யாருமில்லை, ஹீரோயின் ஹன்சிகாதான் வில்லி என கூறினார் படத்தை இயக்கும் லட்சுமணன்.
கள்வனின் காதலி படத்தை தயாரித்த லட்சுமணன் இயக்குனராகும் முதல் படம் ரோமியோ ஜுலியட். இதில் ஜெயம் ரவி நட்சத்திர ஹோட்டலின் ஜிம் கோச்சாக நடிக்கிறார். சிக்ஸ்பேக் தேவைப்படும் சினிமா நடிகர்களுக்கு அதற்கான உடற்பயிற்சி சொல்லித் தருகிறவர் ஜெயம் ரவிதான். இந்த கதாபாத்திரம் காரணமாக சில முன்னணி நடிகர்களை நடிகர்களாகவே நடிக்க வைக்க இருப்பதாக லட்சுமணன் கூறினார். 
 

ஹன்சிகாவுக்கு இதிலும் விமான பணிப்பெண் வேடம். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திலும் அவருக்கு ஏர் ஹோஸ்டஸ் வேடம்தான்.

இவரும் ஜெயம் ரவியும் விமான பயணத்தின் போது சந்தித்து காதல் கொள்கிறார்கள். நமது காதலன் கடைசிவரை நம்முடன் இருப்பாரா என்ற பயத்துடனே இருக்கும் கதாபாத்திரம் ஹன்சிகாவுக்கு. அவரது இந்தப் பயம்தான் படத்தின் வில்லனே.
 
விடிவி கணேஷ் இந்தப் படத்தில் முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார். முதல்கட்டப் படப்பிடிப்பை சென்னையில் நிறைவு செய்துள்ளனர்.