வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 15 ஏப்ரல் 2014 (14:03 IST)

வெளிநாடுகளில் நான் சிகப்பு மனிதன், மான் கராத்தே வசூல் நிலவரம்

நான் சிகப்பு மனிதனுக்கு உள்ளூரைப் போலவே வெளிநாட்டிலும் சுமாரான வரவேற்பே. யுஎஸ்ஏ-யில் படம் பாக்ஸ் ஆபிஸில் 64வது இடத்தையே பிடித்துள்ளது.
சென்ற வாரம் வெளியான இப்படம் யுஎஸ்ஏ-யில் முதல் மூன்று தினங்களில் 15 திரையிடல்களில் 14,376 அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. நமது ரூபாயில் சுமார் 8.65 லட்சங்கள்.
 
ஆஸ்ட்ரேலியாவில் மான் கராத்தே படம் பாக்ஸ் ஆபிஸில் 47வது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வார இறுதியில் இப்படம் 3 திரையிடல்களில் 3,321 ஆஸ்ட்ரேலிய டாலர்களை வசூலித்துள்ளது. இரண்டு வாரங்களில் மொத்த வசூல் 37,770 ஆஸ்ட்ரேலிய டாலர்கள். ரூபாயில் 21.46 லட்சங்கள்.
 
மலேசியாவில் இதுவரை மான் கராத்தே 1.28 கோடியை வசூலித்துள்ளது.