1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : சனி, 10 மே 2014 (15:51 IST)

வில்லனாக ஆசைப்படும் ஹீரோ

இயக்குனர் விஜய்யின் அண்ணன் நடிகர் உதயா. சில படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஆனாலும், எதிர்பார்த்த உயரத்தை தொடமுடியவில்லை. இன்னும் சில படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும், அவைகள் வெளிவராமல் பெட்டிக்குள் தூங்குகின்றன. 
தற்போது ஆவி குமார் என்ற காமெடி கலந்த த்ரில்லர் படத்தில் ஆவிகளோடு பேசும் வித்தியாசமான மந்திரவாதியாக நடித்து வருகிறார். பல ஆண்டுகள் சினிமாவில் இருந்தும் பெரிய அளவுக்கு வர முடியவில்லையே என்கிற வருத்தம் இருந்தாலும், என் முயற்சிகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். 
 
தலைவா படத்தில் விஜயுடன் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தேன். அந்தப் படம் அனைவரிடமும் என்னை கொண்டு சேர்த்தது. அது போன்று கதைக்கு முக்கியமான குணசித்திர கதாபாத்திரங்கள் என்றாலும் நடிக்கத் தயார். அதுபோல வித்தியாசமான வில்லன் கேரக்டர்களிலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்கிறார் உதயா.