Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஜய் பிறந்த நாள் அன்று அஜித் அளிக்கவுள்ள ஆச்சரிய பரிசு

sivalingam| Last Updated: புதன், 17 மே 2017 (06:28 IST)
அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தினமும் மோதிக்கொண்ட போதிலும் உண்மையில் அஜித்தும் விஜய்யும் நெருங்கிய நண்பர்கள் என்பது இருவருக்கும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. ஒவ்வொரு ஆண்டும் விஜய்யும் அஜித்தும் அவரவர்களின் பிறந்த நாள் அன்று மற்றவரிடம் பரிசு பெறும் வழக்கம் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் வரும் ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாள் வரவுள்ள நிலையில் அதே நாளில் அஜித் தனது 'விவேகம்' படத்தின் பாடல் வெளியீட்டை வைக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது அஜித், விஜய்க்கு தரும் பிறந்த நாள் பரிசு என்றே இருதரப்பு ரசிகர்களும் எடுத்து கொள்ளலாம்

மேலும் இதே விஜய் பிறந்த நாள் தினத்தில் 'தளபதி 61' படத்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் ஆர்வம் காட்டி வருவதாகவும் அல்லது அட்லீஸ்ட் 'தளபதி 61' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டராவது அந்த நாளில் வெளியாகும் என கோலிவுட் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன


இதில் மேலும் படிக்கவும் :