வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: வியாழன், 29 மே 2014 (15:51 IST)

விஜய் ஆண்டனியை சந்திக்க விருப்பமா? இதோ ஒரு வாய்ப்பு

நான் படத்துக்குப் பிறகு விஜய் ஆண்டனி தயாரித்து நடித்து வரும் படம் சலீம். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் ஸ்டுடியோ 9 மற்றும் ஸ்ரீகிரீன் புரொடக்சன்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகின்றன.
 
இதன் பாடல்கள் வெளியீட்டு விழா அடுத்த மாதம் 5ஆம் தேதி நடக்கிறது. விஜய் ஆண்டனிதான் சலீமுக்கு இசை. பாடல்களையும், படத்தையும் ஒருசேர புரமோட் செய்ய போட்டி ஒன்றை அறிவித்துள்ளனர். போட்டி என்றதும் மூளையை கசக்கி அறிவை பிழிந்தெடுப்பார்களோ என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். இது ரொம்ப சிம்பிள்.
 
இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி சலீம் என்ற முஸ்லீம் இளைஞனாக நடிக்கிறார். நான் படத்திலும் அவரது கேரக்டர் பெயர் சலீம்தான். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்களின் பெயர் சலீமாக இருந்தால் [email protected] என்ற இமெயில் முகவரிக்கு உங்களின் முகவரி தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை மெயில் செய்தால் போதுமானது. 
 
ஜூன் 5 நடக்கும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் விஜய் ஆண்டனியை சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.
 
சலீம் படத்தை என்.வி.நிர்மல் இயக்கியுள்ளார்.