வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: புதன், 7 மே 2014 (17:08 IST)

விஜயகாந்தின் மகனுடன் தனது மகள் நடிக்க ஸ்ரீதேவி மறுப்பு

விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் ஜோடியாக தனது மகள் நடிக்க ஸ்ரீதேவி மறுப்பு தெரிவித்துள்ளார்.
சண்முகபாண்டியனை சினிமாவில் அறிமுகப்படுத்த நல்ல கதையாக விஜயகாந்த் தேடி வந்தார். கதை தேடும் படலம் பல வருடங்கள் நடந்து பிறகு சமீபத்தில் ஒரு கதையை தேர்வு செய்தார். சந்தோஷ் குமார் ராஜன் அந்தக் கதையை இயக்குவது என்று தீர்மானித்து பிரமாண்டமாக படத்தின் தொடக்க விழாவும் நடந்தது. படத்துக்கு சகாப்தம் என்று பெயரும் வைத்தனர்.
 
ஆனால் நாயகி யார் என்பதில் குழப்பம் நீடித்தது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சண்முகபாண்டியனுக்கு ஜோடியாக நடிக்க வைக்கலாம் என்று ஸ்ரீதேவியை அணுகியிருக்கிறார்கள். மகளின் படிப்பு இன்னும் முடியவில்லை என்று ஜான்வி நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார் ஸ்ரீதேவி. 
 
தற்போது சண்முகபாண்டியன் ஜோடியாக நடிக்க புனேயைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவரை தேர்வு செய்துள்ளனர்.
 
அரசியலில் பிஸியாகிவிட்டாலும் படத்தின் ஒவ்வொரு நகர்வும் விஜயகாந்தின் ஆலோசனையின்படியே நடக்கிறது. அவர் சகாப்தத்தில் நடிக்கக்கூடும் என்கின்றன செய்திகள். இனி மகன் நடிக்கும் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று அவர் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.