வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 1 மே 2014 (16:50 IST)

ரஜினி அழைத்த பிறகு நோ சொல்ல முடியவில்லை

மைசூரில் படமாக்கப்பட்டு வரும் ரஜினியின் லிங்கா படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். ரஜினியே ரத்னவேலுவை தொடர்பு கொண்டு லிங்கா படத்தில் பணிபுரியும்படி கேட்டுக் கொண்டார். ரஜினி கேட்ட பிறகு நோ சொல்ல முடியுமா? எனது ஏழு வருட கனவை ஒதுக்கி வைத்து லிங்கா படத்துக்கு வந்துவிட்டேன் என்றிருக்கிறார் ரத்னவேலு அலைஸ் ராண்டி.
அது என்ன ஏழு வருட கனவு...?
 
இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக இருக்கும் ராண்டிக்கு படம் இயக்க வேண்டும் என்பது பல வருட கனவு. அதற்கான முயற்சியை - ஸ்கிரிப்ட் எழுதுவதை - சமீபத்தில் தொடங்கினார். இந்த புதிய வேலை காரணமாக அவர் எந்தப் படத்தையும் ஒத்துக் கொள்ளவில்லை. தனது அடுத்த வேலை சொந்த ஸ்கிரிப்டை இயக்குவதாகதான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தமிழ், தெலுங்கில் ஒளிப்பதிவு செய்ய வந்த பல வாய்ப்புகளை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
 
இந்நிலையில் ரஜினியிடமிருந்து அழைப்பு. லிங்கா படத்துக்கு நீங்கள்தான் ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று. ரஜினியே கேட்ட பிறகு நோ சொல்ல முடியுமா. என்னுடைய ஏழு வருட கனவை ஒதுக்கி வைத்து லிங்காவுக்கு வந்துவிட்டேன் என்று பிரபல நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
 
லிங்காவில் ரஜினி பலவித தோற்றங்களில் வருகிறார். அதில் ஒரு தோற்றத்துக்கான டெஸ்ட் ஷுட் ஏறக்னவே நடந்து முடிந்துள்ளது. மைசூரில் 40 நாள் ஷெட்யூல்டை முடித்த பின் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.
 
முத்து, படையப்பா போன்று கமர்ஷியல் படமாக லிங்கா இருக்கும் என பேட்டியில் கூறியுள்ளார் ரத்னவேலு.