வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : திங்கள், 9 ஜூன் 2014 (19:52 IST)

ரஜினியின் லிங்காவில் நடிக்கும் கருணா

கருணாவுடன் ஒரு கரனையும் சேர்த்துவிடுங்கள். கருணாகரன். 
 
கருணாநிதியை சமீபத்தில் ரஜினி சந்தித்ததால் கருணா என்றதும் சிலருக்கு கருணாநிதி நினைவுக்கு வந்திருக்கலாம். அதனை அரசியல் ரப்பர் கொண்டு அழித்துவிடுங்கள்.
 
தமிழ் சினிமாவுக்கு சமீபத்தில் கிடைத்த சைலண்ட் காமெடியர் கருணாகரன். உடம்பை அலட்டாமல், குரலை நெ‌ளிக்காமல், முகத்தை உணர்ச்சிகளால் புரட்டாமல் தனது அப்பாவி லுக்கை வைத்து ஸ்கோர் செய்வதில் கருணாகரன் கில்லாடி. சூதுகவ்வும் படத்தில் அப்பாவியாக அம்மாவிடம் வந்து, அம்மா நான் சிகரெட் பிடிக்கிறதை நிறுத்திடலாம்னு இருக்கேன் என்று சொல்வதாகட்டும். பிசினஸ் செய்ய அப்பா பணம் தரவில்லை என்றதும், அம்மா நான் சிகரெட் பிடிக்கலாம்னு இருக்கேன் என்பதாகட்டும். எப்போது நினைத்தாலும் புன்னகை கியாரண்டி.
 
யாமிருக்க பயமே படத்தில் படம் நெடுக கலக்கிய கருணாகரனை ரஜினியின் லிங்காவில் நடிக்க வைக்கப் போகிறாராம் கே.எஸ்.ரவிக்குமார். ரஜினியுடன் காம்பினேஷன் காட்சிகளும் இருக்கிறதாம். 
 
லிங்காவில் ரஜினி ஜோ‌டியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்கா நடிக்கிறார்கள். பிரிட்டன் நடிகை ஒருவரும் இருக்கிறார். காமெடிக்கு சந்தானம். ரஹ்மான் இசையமைக்க ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.
 
கருணாகரனின் பங்களிப்பு லிங்காவை கலகலப்பூட்டும் என்று எதிர்பார்க்கலாம்.