வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: புதன், 30 ஏப்ரல் 2014 (18:56 IST)

மோகன்லால் படத்துக்கு தடை - மலையாள திரையுலகில் பதட்டம்

மோகன்லால் நடித்திருக்கும் மிஸ்டர் ஃப்ராட் திரைப்படத்தை வெளியிட கேரளா ஃபிலிம் எக்ஸிபிட்டர்ஸ் பெடரேஷன் தடை விதித்ததால் மோதல் ஏற்பட்டுள்ளது.
மிஸ்டர் ஃப்ராட் படத்தை பி.உன்னிகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இவர் மலையாள சினிமாவின் தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குனர்களின் சங்கமான ஃபிலிம் எம்ப்ளாயிஸ் பெடரேஷன் ஆஃப் கேரளாவின் ஜெனரல் செகரட்ரியாக உள்ளார். இவருக்கும் ஃபிலிம் எக்ஸிபிட்டர்ஸுக்கும் இடையே மோதல். இதன் காரணமாக அவர் இயக்கிய மிஸ்டர் ஃப்ராட் படத்துக்கு தடை விதித்தனர்.
 
அதனைத் தொடர்ந்து இயக்குனர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். மே 8 மோகன்லாலின் படம் வெளியாகவில்லை என்றால் எந்தப் படமும் தியேட்டர்களில் ஓடாது என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் பிரச்சனை குறித்து எதிர்தரப்பிடம் விவாதிக்கப் போவதில்லை எனவும் அறிவித்தனர்.
 
இதற்கு பதிலடி தரும்விதத்தில் பேசிய எக்ஸிபிட்டர்ஸ் பெடரேஷன் பிரசிடென்ட் லிபர்ட்டி பஷீர், படம் ஓடுவதா வேண்டாமா என்பதை தீர்மானிக்க வேண்டியவர்கள் தயாரிப்பாளர்களே தவிர இயக்குனர்கள் அல்ல என்று கூறினார்.
 
இதனைத் தொடர்ந்து மொத்த மலையாள சினிமாவின் படப்பிடிப்புகளையும் நிறுத்த இயக்குனர்கள் தரப்பு தீவிரமாக யோசித்து வருகிறது.