1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 11 ஏப்ரல் 2014 (13:30 IST)

நான் சிகப்பு மனிதனை தடை செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

பழைய படங்களின் பெயரை புதுப்படங்களுக்கு சூட்டும் போது பழைய படம் சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி கடிதம் வாங்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விதி இருக்கிறது. இந்த விதி பெரிய நிறுவனங்களிடம் செல்லுபடியாவதில்லை. அப்பாவி தயாரிப்பாளர் மாட்டும் போது மட்டும் சங்கம் அவர்களை இந்த விதியைக் காட்டி தாயம் விளையாடும். 
நான் சிகப்பு மனிதன் ரஜினி நடிப்பில் 1985ல் பூர்ணச்சந்திரராவ் தயாரித்த படம். அப்படத்தின் நெகடிவ் உரிமை இப்போது சென்னையைச் சேர்ந்த நாகப்பன் என்பவரிடம் உள்ளது. விஷால் நடித்திருக்கும் நான் சிகப்பு மனிதனின் பெயர் உரிமை என்னிடம் உள்ளது. அதனை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கடைசி நேரத்தில் கோர்ட்டுக்கு சென்றார் நாகப்பன்.
 
இதனை எதிர்த்து விஷால் ஃபிலிம் பேக்டரி மற்றும் யுடிவி சார்பில் வாதாடிய வழக்கறிஞர், நாகப்பனுக்கு நான் சிகப்பு மனிதன் தலைப்பின் மீது எந்த உரிமையும் இல்லை, தலைப்பை குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அவர் புதுப்பிக்க தவறினார் என்று வாதிட்டார்.
 
கடைசியில் ஜெயம் விஷாலுக்கு. நாகப்பனுக்கு சட்டப்படி நான் சிகப்பு மனிதன் பெயரில் எவ்வித உரிமையும் இல்லை என நீதிபதி தீர்ப்பளித்தார். 
 
இந்த தீர்ப்பு காரணமாக எவ்விதப் பிரச்சனையுமின்றி படம் சொன்னபடி இன்று திரைக்கு வந்துள்ளது.