வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: சனி, 10 மே 2014 (17:43 IST)

தவறான வழியில் பணம் தேடும் ஹீரோ

மருத்துவம் செய்ய முடியாமல் தனது தாயை இழந்து தவிக்கிறான் ஹீரோ. அது மட்டுமல்லாமல், பணம் இல்லாததை காரணம் காட்டி, உயிருக்கு உயிராக காதலித்த தன் காதலியும் பிரிந்து சென்றுவிடுகிறாள். 
இதனால் மனம் உடைந்துபோன ஹீரோ, எந்த பணத்தால் தாயையும், காதலையும் இழந்தோமோ, அதே பணத்தை எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்து, தவறான வழிகளில் பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கிறான். இதுதான் மனம் மயங்குதே படத்தின் மையக் கரு. 
 
இந்தப் படத்தை கருமாரி, பி.கே.முத்துகுமார், வி.செந்தில்குமார் ஆகியோர் கூட்டாக தயாரிக்கிறார்கள். நாயகனாக ராட்டிணம் படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்த லகுவரனும், நாயகியாக ரியாவும் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் இயக்குனர் மனோஜ்குமார்.