1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: சனி, 21 ஜூன் 2014 (13:16 IST)

ஜூன் 25 வாலிபராஜா இசை, கமல் வெளியிடுகிறார்

வரும் 25-ம் தேதி சந்தானம், சேது நடித்திருக்கும் வாலிபராஜா படத்தின் பாடல்களை வெளியிடுகின்றனர். நடிகர் கமல்ஹாசன் இந்த விழாவில் கலந்து கொண்டு பாடல்கள் அடங்கிய முதல் சிடி-யை வெளியிடுகிறார்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த சேது, சந்தானம், விசாகா சிங் மூவரும் மீண்டும் ஒன்றிணைந்திருக்கும் படம் வாலிபராஜா. முழுநீள ரொமான்டிக் காமெடிப் படமான இதில் இந்தி நடிகை நுஸ்ரத் அறிமுகமாகிறார். இவர்கள் தவிர ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி, விடிவி கணேஷ் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். இயக்கம் சாய் கோகுல் ராம்நாத். இசை ரதன்.
 
இதன் பாடல்களை வரும் 25-ம் தேதி வெளியிடுகின்றனர். கமல் கலந்து கொண்டு முதல் பாடல் சிடி-யை வெளியிடுகிறார்.
 
படத்தை இயக்கியிருக்கும் சாய் கோகுல் ராம்நாத் கே.வி.ஆனந்தின் முன்னாள் உதவி இயக்குனர் என்பது முக்கியமானது.