திங்கள், 13 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 20 டிசம்பர் 2023 (09:20 IST)

சூப்பர் ஸ்டார் பட்டத்தால் என்ன பயன்… மலையாள நடிகை பார்வதி கேள்வி

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் யார் சூப்பர் ஸ்டார் என்ற சர்ச்சை ஒன்று விஜய் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு இடையில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் ரஜினியின் வியாபாரத்தை விஜய் தாண்டிவிட்டார். அதனால் அவர்தான் இப்போதைய சூப்பர் ஸ்டார் என விஜய் ரசிகர்கள் சொல்ல, ஜெயிலர் படத்தின் வசூலைக் காட்டி என்றுமே ரஜினிதான் சூப்பர் ஸ்டார் என ரஜினி ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது அந்த சர்ச்சை மலையாள திரையுலகிலும் எழுந்துள்ளது. சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய பார்வதி திருவொத்துவிடம் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “சூப்பர் ஸ்டார் பட்டத்தால் என்ன பயன்? அதெல்லாம் நேரத்தை வீணாக செலவழிக்கும் வேலைதான். அந்த பட்டம் ஏதாவது இமேஜ் கொடுக்கிறதா என்று தெரியவில்லை.

என்னை ஒரு சூப்பர் ஆக்டர் என்று கூறினால் நான் மகிழ்ச்சி அடைவேன். மலையாள சினிமாவில் பஹத் பாசில், ஆசிப் அலி மற்றும் ரீமா கலிங்கல் போன்ற சூப்பர் ஆக்டர்கள் உள்ளனர்” எனக் கூறியுள்ளார். பார்வதியின் இந்த வீடியோ வைரலாக பரவி ஆதரவையும் எதிர்ப்பையும் சம்பாதித்து வருகிறது.