1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: சனி, 14 ஜூன் 2014 (13:12 IST)

சி.வி.குமாரின் அடுத்த வெளியீடு சரபம் - ஜுன் 18 முதல் பாடல்கள்

வித்தியாசமான கதை, கச்சிதமான திரைக்கதை, இயல்பான நடிகர்கள், குறைவான பட்ஜெட் என்ற தனது வெற்றி பார்முலாவிலிருந்து சற்றும் பிசகாமல் திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் சி.வி.குமார் தயாரித்திருக்கும் படம் சரபம். 
 
திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்டும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும் இணைந்து தயாரித்த முண்டாசுப்பட்டி இன்று வெளியாகியுள்ளது. சி.வி.குமாரின் அடுத்த வெளியீடு எது என்ற கேள்வி இருந்தது. காரணம் கன்னட லூசியாவின் தமிழ் ரீமேக்கையும் அவர்தான் தயாரித்து வருகிறார். ஆனால் அதற்குமுன் சரபம் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
சரபம் க்ரைம் த்ரில்லர் வகைமையைச் சாந்தது. அறிமுக இயக்குனர் அருண் மோகன் படத்தை இயக்க மைக்கேல் பிரிட்டோ இசையமைத்துள்ளார். பாடல்கள் வரும் 18 -ம் தேதி வெளியாகிறது. பிரபல எப்எம்மில் நேரடியாக பாடல்களை வெளியிடுகின்றனர்.
 
அடுத்த மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.