1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 7 ஜனவரி 2021 (10:15 IST)

கேப்டனுக்கு மிகப்பெரிய தோல்வி படத்தைக் கொடுத்துவிட்டேன் – புலம்பிய மசாலா இயக்குனர்!

இயக்குனர் பேரரசு தான் இயக்கிய தர்மபுரி திரைப்படம் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்ததற்குக் காரணம் தான் தான் என பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிகளோடு அறிமுகமானவர் இயக்குனர் பேரரசு. அவர் இயக்கிய திருப்பாச்சி மற்றும் சிவகாசி ஆகிய இரு படங்களும் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. ஆனால் அதன் பின்னர் இயக்கிய திருப்பதி, தர்மபுரி, பழனி உள்ளிட்ட படங்கள் சொல்லிக்கொள்ளும் படி அமையவில்லை.

இந்நிலையில் விஜய்காந்த் நடிப்பில் தான் இயக்கிய தர்மபுரி படத்தின் தோல்விக்கு முக்கியக் காரணம் நான் தான் என அவர் ஒத்துக்கொண்டுள்ளார். இதுகுறித்த சமீபத்திய பேட்டியில் ‘கொஞ்சம் கூட இடைவெளி இலலாமல் படங்கள் பண்ண வேண்டும் என்ற அவசரத்தில் மோசமான திரைக்கதையால் கேப்டனுக்கு மிகப்பெரிய தோல்வி படத்தைக் கொடுத்துவிட்டேன்’ எனக் கூறியுள்ளார்.