கார்த்தியின் மெட்ராஸ் பாடல்கள், திங்க் மியூஸிக் வெளியிடுகிறது

Madras First Look, Karthi, கா‌ர்‌த்‌தி, மெ‌ட்ரா‌ஸ் ப‌ர்‌ஸ்‌ட் லு‌க்
Geetha priya| Last Modified புதன், 18 ஜூன் 2014 (11:13 IST)
கார்த்தி நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் மெட்ராஸ் படத்தின் பாடல்களை திங்க் மியூஸிக் வெளியிடுகிறது.
வடசென்னையை மையமாக வைத்து தயாராகியிருக்கும் மெட்ராஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை இரண்டு நாள் முன்பு வெளியிட்டனர். படத்தில் இசை முக்கிய பங்கு வகிக்கிறது. பிரபல இளம் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் படத்துக்கு இசையமைத்துள்ளார். படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூஸிக் வாங்கியுள்ளது. 
 
அடுத்த மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் வரும் 23 -ம் தேதி பாடல்களை வெளியிடுகின்றனர். ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் படத்தை தயாரித்துள்ளது. ஹீரோயினாக நடித்திருப்பவர் கேத்ரின் தெரேஸn.
 
அட்டகத்திக்குப் பிறகு இரஞ்சித் இயக்கியுள்ள படம் என்பதால் மெட்ராஸுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :