1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: வெள்ளி, 2 மே 2014 (13:09 IST)

கத்தியில் அரவிந்த், ஆண்ட்ரூவாக நடிக்கும் விஜய்

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தி வேகமாக வளர்ந்து வருகிறது. தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டு வரும் எண்ணத்தில் அனைவரும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
கொல்கத்தாவில் ஆரம்பித்த இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் என பல இடங்களில் நடந்தது. விஜயுடன் சமந்தா நடிக்கிறார், இசை அனிருத்.
 
படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். அதில் நான்கு பாடல்கள் முடிந்துவிட்டன. ஐந்தாவது பாடல் ஒரு மெலடி என்றும், விஜய் அதனை பாடுவார் எனவும் படயூனிட் கூறுகிறது. இதுதவிர ஒரு தீம் மியூஸிக்கும் உள்ளது.
 
படத்தில் விஜய்க்கு இரு வேடங்கள். ஒரு கதாபாத்திரத்தின் பெயர் அரவிந்த், இன்னொரு கதாபாத்திரத்தின் பெயர் ஆண்ட்ரூ. இதில் ஆண்ட்ரூ வில்லனாக வருகிறார். சமந்தா வேணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
 
பாட்ஷாவில் மாணிக்கத்தின் வில்லன் ஆண்டனி போல, இங்கே அரவிந்தனின் வில்லன் ஆண்ட்ரூ.